





ஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே சொல்வது போல ”போகாதிருக்கும் நினைவுகளை’ உறைபதனிட்டு வைத்திருக்கிறார் அல்லது மம்மியாக்கம் செய்து வைத்திருக்கிறார் அல்லது இலண்டனில் உள்ள ஒரு செயற்பாட்டாளர் கூறியபோல, இறந்த காலத்தை ஊறுகாய்போட்டு வைத்திருக்கிறார்….
Read more...அ.இரவி எழுதிய காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள ஆயுதவரி (நெடுங்கதைகளின் தொகுப்பு) நுாலில் எழுதிய முன்னுரை படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம்…
Read more...18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர்…
Read more...கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புக்கள் நுாலுக்கு எழுதிய முன்னுரை எது உண்மை? பலம் தான் உண்மை என்று நீட்ஷே சொன்னார். ஈழப்போரிலக்கியப் பரப்பில் வெற்றி பெற்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு படைப்பாளியும் வெற்றி பெற்ற தரப்பிற்கு எதிரான உண்மைகளை வெளிப்படையாக பேச முடியாத ஓர் இலக்கியச் சூழல் நிலவி வந்திருக்கின்றது. நிலவுகிறது….
Read more...