





ஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது யுகபுராணம். – எழுநா
Read more...நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு…
Read more...மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில் குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. 2012 –…
Read more...