





ஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே சொல்வது போல ”போகாதிருக்கும் நினைவுகளை’ உறைபதனிட்டு வைத்திருக்கிறார் அல்லது மம்மியாக்கம் செய்து வைத்திருக்கிறார் அல்லது இலண்டனில் உள்ள ஒரு செயற்பாட்டாளர் கூறியபோல, இறந்த காலத்தை ஊறுகாய்போட்டு வைத்திருக்கிறார்….
Read more...